சிலாஜித் என்பது இயற்கையாக கிடைக்கும் மினரல் வகையை சார்ந்தது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும், சிலாஜித்தின் பல்வேறு நன்மைகள் குறித்து பிஹைண்ட் ஸ்டோன் டாக்டர் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இமாலய மலைப்பகுதிகளில் சிலாஜித் கிடைக்கிறது. இதனை சரியான முறையில் சுத்திகரித்து ஆண்மையை அதிகரிக்கும் மருந்தாக எடுத்துக் கொள்கிறோம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதனை ஒவ்வொரு தனிநபரின் உடல் எடைக்கும் ஏற்றார் வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட சிலாஜித்தை வேகவைத்த முட்டையினுள் வைத்து தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார். இப்படி செய்வதன் மூலம் நீர்த்துப் போன விந்தணுக்களை கெட்டியாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றலும் சிலாஜித்தில் இருப்பதாக மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருக்கும் சத்தை உடல் உறிந்து கொள்வதற்கான பணியை சிலாஜித் செய்கிறது என்று அவர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
அந்த வகையில் முறையாக மருத்துவரின் ஆலோசனையின் படி சரியான அளவில் சிலாஜித் சாப்பிடுவது அவசியமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.