இட்லி மா வச்சு தோசை, இட்லி, ஆனியன் தோசைன்னு பல வெரைட்டி சாப்பிட்டு இருப்போம். ஆனால் இட்லி மாவு வச்சு சுவையான ஒரு ஸ்வீட் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த ஸ்வீட் ரொம்பவே சுவையா இருக்கும் வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை
துருவிய தேங்காய்
இட்லி மாவு
வெல்லம்
நெய்
அரிசி மாவு
ஏலக்காய் தூள்
சர்க்கரை
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு கடையில் நெய் சேர்த்து துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து நன்கு வறுபட்டதும் அதில் பொட்டுக்கடலை பொடியையும் சேர்த்து கலந்து விடவும். இவை அனைத்தும் நன்கு கலந்து வந்ததும் அதில் வெல்லப்பாகை சேர்த்து கலந்து விட்டு இறக்கி உருண்டை பிடித்து வைக்கவும்.
இட்லி மாவு இருந்தா உடனே செஞ்சு கொடுத்து பாருங்க,பாராட்டு நிச்சயம்| idli batter snacks recipe |
பின்னர் ஒரு பவுலில் இட்லி மாவு எடுத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். ஒரு பணியாரம் சட்டியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருட்டி வைத்த உருண்டைகளை இட்லி மாவில் நனைத்து பணியார குழியில் வேக விடவும். இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு நன்கு சிவந்து வந்ததும் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“