சப்பாத்திக்கு மாவு பிசைந்து கை வலிக்குதா? அப்போ மிக்ஸியில் மாவு பிசைந்து பாருங்கள். எத்தனை பேராக இருந்தாலும் மிக்ஸியிலேயே மாவு பிசைந்து சாஃப்ட் சப்பாத்தி செய்யலாம்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு கோதுமை மாவு, எண்ணெய், உப்பு, சர்க்கரை, தண்ணீர் ர தண்ணி எல்லாமே சேர்த்து விட்டு விட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் எப்போதும் போல ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்னர் எப்போதும் போல சப்பாத்திக்கு மாவு தேய்த்து கல்லில் போட்டு எடுத்தால் சாஃப்டான சப்பாத்தி கிடைக்கும். இந்த முறையில் பூரி கூட செய்யலாம். மிகவும் எளிமையாக சட்டென்று 5 நிமிடத்தில் இதனை செய்து விடலாம்.
குறிப்பாக இதில் அனைத்து பொருட்களும் சரியான அளவில் போட வேண்டும். தண்ணீர் கூட குறைத்து ஊற்றினால் மாவு பிசைய நன்றாக வராது. எனவே அளவில் கவனம் தேவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“