வாழைத்தண்டு மோர் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
வாழைத்தண்டு நறுக்கியது – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கெட்டித் தயிர் – 1 கப்
அரைக்க
தேங்காய் துருவல் – ¼ கப்
பச்சை மிளகாய் – 1
சீரகம், கடுகு – தலா ¼ டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா ¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 1
பெருங்காயம், கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
வாழைத்தண்டை சிறிது உப்பிட்டு குக்கரில் வேகவிட்டு வடித்து ஆறவிடவும். அரைக்கும் தேவையான பொருட்களை மைய அரைத்து சிலுப்பிய தயிரில் கலந்து ஆறவிட்ட வாழைத்தண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்து தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து சேர்க்கவும். அவ்வளவு தான், வாழைத்தண்டு மோர் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“