வாழைத் தண்டில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
நறுக்கிய வாழைத் தண்டு – 1 கப்
நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை நறுக்கியது – ¼ கப்
பச்சை மிளகாய், இஞ்சி – சிறிதளவு
தோசை மாவு – 2 கப்
நெய் (அ) எண்ணெய் – 100 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேகவைத்த வாழைத்தண்டை நறுக்கி சேர்க்கவும். இப்போது தோசை மாவு எடுத்து அதில் இந்த கலவையை சேர்த்து எப்போதும் போல் தோசை கல்லில் தோசை ஊற்றி எடுத்தால், சத்தான வாழைத் தண்டு ஊத்தப்பம் ரெடி. சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“