நிறைய பேருக்கு வாழைக்காய் நல்லதா? வாழைப்பழம் நல்லதா? என்ற கேள்வி இருக்கும். இனி அந்த குழப்பம் தேவை இல்லை. இனி வாழைக்காய் நல்லதா? வாழைக்காய் நல்லதா என்று பார்ப்போம்.
ஊட்டச்சத்து முதல் சர்க்கரை பிரச்சனை அப்படியாக அனைத்திலும் வாழைப்பழத்தின் பங்கு மிகவும் அவசியமாகும். இப்படி இருக்கையில் வாழைப்பழம், வாழைக்காய் எது நல்லது என்று மருத்துவர் கார்த்திக்கேயன் கூறுகிறார்.
சத்துக்கள்: 118 கிராம் நடுத்தர அளவிலான வாழைக்காயில் உள்ள சத்துக்கள்
நார்ச்சத்து: 3 கிராம்
பொட்டாசியம்: 9% (DV)
வைட்டமின் B6: 25% DV
வைட்டமின் சி: 11% DV
மக்னீசியம்: 7% DV
தாமிரம்: DV இல் 10%
மாங்கனீசு: 14% DV
வாழைக்காயில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும்.
வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவும்.
இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மேலும் இதில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் இருப்பதால் குடல் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை போக்கிறது பெருங்குடல் மற்றும் சிறுகுடல் ஆகியவற்றில் தேங்கும் நச்சு மற்றும் கழிவுகளை வெளியேற்றும்.
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் ஹார்மோன்களை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுகோஸை அளவை கட்டுப்படுத்துகிறது. வாழைப்பழத்தை விட சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை தாராளமாக சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திக்கேயன் கூறுகிறார்.
வாழைக்காயின் மகத்துவம் ! green raw banana health benefits | dr karthikeyan
வாழைக்காயை வறுவலாக சாப்பிடுவதை காட்டிலும் பொறியலாக சாப்பிடுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“