வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தலாம். வாழைப் பழம், வாழை இலை, வாழைத் தண்டு, வாழைப் பூ என எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். வாழையில் அத்தனை சத்துகள் நிறைந்துள்ளன. வாழைப்பூ பொரியலாக செய்தால் சிலர் சாப்பிடாமல் இருப்பர். ஆனால் இந்த மாதிரி செய்து கொடுங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்காது.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ
மோர்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
துவரம் பருப்பு
தேங்காய்த்துருவல்
கடுகு
மஞ்சள்தூள்
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, மோர் கலந்த தண்ணீரில் ஊற கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த்துறுவல் வேக வைத்த பருப்பு, உப்புத்தூள் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“