/tamil-ie/media/media_files/uploads/2023/03/vada-pav-1200.jpg)
உலகின் பெஸ்ட் சாண்ட்விச் பட்டியலில் வடபாவு இடம் பிடித்துள்ளது.
இந்தியர்களின் பிடித்தமான உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ள வட பாவ், மும்பையில் தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த உணவை மும்பை வாசிகள், காலை, மாலை, இரவு என சிற்றுண்டி போன்று உண்ணுகின்றனர். இந்த வட பாவ் உணவு உலகின் தலைசிறந்த 50 உணவுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
சமீபத்தில், 50 'உலகின் சிறந்த சாண்ட்விச்கள்' பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது, இது பாரம்பரிய உணவுக்காக Matija Babic நிறுவிய அனுபவமிக்க பயண வழிகாட்டியாகும்,
இதில் சமையல் குறிப்புகள், உணவு விமர்சகர்கள் மற்றும் பிரபலமான பொருட்கள் மற்றும் உணவுகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவருகின்றன.
இதில் துருக்கியின் பிரபலமான உணவான டாம்பிக் அல்லது கோபிட் கபாப், எக்மெக் ரொட்டி உள்ளிட்டவைகளும் வருகின்றன.
அந்த வகையில் பட்டியலில் முதல் 15 இடம் பெற்றுள்ள உணவுகளை பார்க்கலாம்.
- டாம்பிக்
- புட்டிஃபாரா
- சாண்ட்விச் டி லோமோ
- ஸ்பைடி
- பான் மி ஹியோ குவே
- இரால் ரோல்
- சொரிபன்
- டோஸ்ட் ஸ்கேகன்
- சங்குசே டி மிலனேசா
- அரெபா அண்டினா
- கியூபன் சாண்ட்விச்
- சிவிடோ
- வட பாவ்
- மாண்ட்ரீல் ஸ்மோக்ட் மீட் (Montreal Smoked Meat)
- ப்ரீகோ
1960கள் மற்றும் 1970களில் தாதர் ரயில் நிலையத்திற்கு அருகில் வேலை பார்த்த அசோக் வைத்யா என்ற தெரு வியாபாரியிடமிருந்து இந்த வட பாவ் தோன்றியதாக டேஸ்ட் அட்லஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.