கை, கால், விரல்கள் மூட்டுகளில் வலி இருப்பவர்களுக்கு ஒரே சிறந்த தீர்வு வாதநாராயணன் கீரை ஆகும்.
உடலில் இருக்கும் வாதத்தை அவ்வபோது வெளியேற்ற மாதம் ஒருமுறை வாதநாராயணன் கீரையை சாப்பிட வேண்டியது அவசியம். இவை வாதத்தை வெளியேற்றிவிடும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது எடுத்துகொள்வது நல்லது.
உடல் வலி , உடல் சோர்வு இருந்தால் வாதநாராயணன் இலையை நீரில் கொதிக்க வைத்து உடலில் ஊற்றி குளிக்கலாம். வாரம் ஒருமுறை வாத நாராயணன் கீரையை பருப்பு கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தாலே நரம்புகள் பலப்படும். ரத்த ஓட்டமும் சீர்படும். முட்டிகளில் வலி வீக்கம் உண்டாகாது.
இப்படியாக வாத நோய்களிஅ போக்கும் வாதநாராயணன் கீரையில் ரொட்டி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாதநாராயணன் கீரை
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கருவேப்பிலை
சீரகம்
கோதுமை அல்லது ராகி மாவு
உப்பு
செய்முறை
இவை அனைத்தையும் நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்னர் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி ரொட்டி மாதிரி தட்டி போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு தட்டி எடுத்தால் போதும் வாதநாராயணன் கீரை ரொட்டி ரெடியாகிவிடும்.
இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸ், காலை, இரவு டிபனாகவும் எடுத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“