மாவடு ஊறுகாய்யை நாம் வீட்டிலேயே செய்யலாம். தவறாமல் இந்த வழிமுறைய பின்பற்றுங்க.
தேவையான பொருட்கள்
வடுமாங்காய் – 1 கிலோ
வர மிளகாய்- 25
கல் உப்பு – 200 கிராம்
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணை- 2 பெரிய ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை :
வடுமாங்காய்யை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். மாங்காயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்க கூடாது. நன்றாக துணி வைத்து துடைத்து எடுக்கவும். தொடர்ந்து வடுமாங்காயின், காம்பில் வழியும் பாலை மறக்காமல் துடைத்து எடுத்து கொள்ளுங்கள். தொடர்ந்து அதை உப்பு சேர்த்து ஒரு நாள் வரை வையுங்கள். குறிப்பாக 3 நாட்கள் உப்பில் போட வேண்டும் என்பார்கள். ஆனால் ஒரு நாளே போதுமானது.

தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வர மிளகாய், கட்கு சேர்த்து நன்றாக வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள். முதலில் மாங்காயில் மஞ்சள் தூள் சேர்த்து கிளரிய பிறகு. அதில் இந்த பொடியை போட வேண்டும். தொடர்ந்து நன்றாக கிளற வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் இதை சாப்பிடலாம்.