வைகாசி விசாகப் பெருவிழாவில் முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் சிறப்பு நெய்வேத்தியமான, பஞ்சு போன்ற கந்தரப்பம் சூப்பர்கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சரிசி: 1 கப் வெள்ளை உருட்டு உளுந்து: அரிசிக்கு மேல் கோபுரம் போல அளந்தது கடலைப்பருப்பு: 2 டேபிள்ஸ்பூன் பைத்தம் பருப்பு: 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்: ¼ டீஸ்பூன் தேங்காய் துருவல்: ¼ கப் பொடித்த வெல்லம்: 1 கப் ஏலக்காய்த்தூள்: தேவையான அளவு உப்பு: ஒரு சிட்டிகை எண்ணெய்: பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, பைத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, 2-3 முறை நன்கு கழுவி, 3 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் கொரகொரப்பான ரவை பதத்திற்கு அரைக்கவும்.
அதே மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும். கடைசியாக, ஏலக்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு ரிப்பன் கன்சிஸ்டன்சியில் இருக்க வேண்டும் (அதாவது, கரண்டியில் இருந்து விழும்போது ரிப்பன் போல விழ வேண்டும்).
ஒரு கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி, அதற்குள் ஒரு சிறிய தட்டை வைத்து, அதிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். தட்டிலுள்ள எண்ணெயில், கலந்து வைத்திருக்கும் மாவை வட்ட வடிவில் ஊற்றவும். அப்பம் நன்கு புசுபுசுவென்று மேலே எழும்பி வந்ததும், தட்டை மட்டும் வெளியே எடுத்து, அப்பத்தை இருபுறமும் சிவக்கும் வரை திருப்பிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.