கடலை மாவில் பாதி அளவு அரிசி மாவு: செஃப் தீனா ஸ்டைலில் வாழைக் காய் பஜ்ஜி இப்படி பண்ணுங்க!
மழைக் காலத்திற்கு ஏற்ற சூடான இந்த வாழைக் காய் பஜ்ஜி ரெசிபியை செஃப் தீனா ஸ்டைலில் எப்படி மிகவும் எளிதாகவும், சீக்கிரமாகவும் தயார் செய்து அசத்தலாம் என்றும் இங்குப் பார்க்கலாம்.
மழைக்காலம் தற்போது தொடங்கி விட்ட நிலையில், மாலை நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் என்ன செய்யலாம் எனக் குழம்பியிருப்போம். மழைக் காலத்திற்கு ஏற்ற சூடான பஜ்ஜி தயார் செய்ய நாம் திட்டமிடலாம். அப்படியொரு யோசனையில் நீங்களும் இருந்தால் இன்றைய வாழைக் காய் பஜ்ஜி ரெசிபி உங்களுக்குத் தான்.
Advertisment
அந்த வகையில், மழைக் காலத்திற்கு ஏற்ற சூடான இந்த வாழைக் காய் பஜ்ஜி ரெசிபியை செஃப் தீனா ஸ்டைலில் எப்படி மிகவும் எளிதாகவும், சீக்கிரமாகவும் தயார் செய்து அசத்தலாம் என்றும் இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக் காய் - 2 எண்ணெய் - தேவையான அளவு கடலை மாவு - 2 கப் அரிசி மாவு - 1 கப் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவாக நன்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்திற்கு வரும் வரை மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனிடையே, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். வாழைக் காயையும் பஜ்ஜிக்கு ஏற்றார் போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
இதன்பிறகு தயரான பஜ்ஜி மாவுக்குள் நறுக்கி வைத்துள்ள வாழைக் காயை போட்டு கொள்ளவும். வாழைக் காயுடன் மாவு நன்றாக ஒட்டிய பிறகு அவற்றை கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால், சூடான வாழைக் காய் பஜ்ஜி ரெடி.