மூளையில் இருக்கக்கூடிய நியூரான்களை மேம்படுத்தி ஆக்டிவேட் செய்யக்கூடிய மருந்து வல்லாரைக்கீரை, அப்படியான வல்லாரைக் கீரையை உங்கள் வீட்டில் வாரத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள் என்று பிரபல செஃப் வெங்கடேஷ் பட், வல்லாரைக் கீரை சூப் செய்து காட்டியுள்ளார்.
பிரபல செஃப் வெங்கடேஷ் பட், வல்லாரைக் கீரை சூப் செய்து காட்டியுள்ளார்.
மூளையில் இருக்கக்கூடிய நியூரான்களை மேம்படுத்தி ஆக்டிவேட் செய்யக்கூடிய மருந்து வல்லாரைக்கீரை, அப்படியான வல்லாரைக்கீரையை உங்கள் வீட்டில் வாரத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள் என்று கூறும், பிரபல செஃப் வெங்கடேஷ் பட், 200 கிராம் வல்லாரைக் கீரையில் 8 பேருக்கு சூப் செய்து காட்டியுள்ளார்.
Advertisment
ஆயூர்வேதத்தில் பயன்படுத்தப்படும் வல்லாரைக்கீரை, வயிற்றில் புண், கட்டியை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளையில் நியூரான்களை ஆக்டிவேட் செய்ய உதவுகிறது, தோல் வியாதி வராமல் தடுக்கும் என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், வல்லாரைக்கீரை சூப் செய்துக்காட்டியுள்ளார்.
வல்லாரைக் கீரையில் பச்சைப் பயிறு, சர்க்கரை வல்லிக்கிழங்கு சேர்த்து வல்லாரைக் கீரை சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
முதலில் ஸ்டவ்வைப் பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள், 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றுங்கள். அதில் 2 துண்டு பட்டை போடுங்கள், ஸ்டார் அன்னாசிப்பூ 2, 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்புன் மிளகு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிண்டுங்கள். 10 பல்லு பூண்டு தோலுடன் நசுக்கிப் போடுங்கள். நன்றாகக் கிண்டி விடுங்கள். 1 கொத்து கருவேப்பிலை, 2 பச்சை மிளகாய் போடுங்கள். அடுத்து கல்பாசி போடுங்கள். அதில் 200 கிராம் வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து போட்டு லேசாக வதக்குங்கள். வதக்கியபின், அதில் ஒரு கால்வாசி எடுத்து வைத்துக்கொள்ளுங்கல்.
மீதமுள்ள வல்லாரைக்கீரையில் 1 டீஸ்புன் உப்பு, மஞ்சள்தூள் போட்டுவிட்டு கி்ண்டிவிட்டு, பிறகு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றுங்கள். பிறகு மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
அடுத்து, எடுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துகொள்ளுங்கள். இப்போது கொதிக்க வைத்த வல்லாரைக்கீரையை வடிகட்டி அந்த சூப்பை எடுத்துகொளுங்கள். அதில், அரைத்து வைத்துள்ள வல்லாரைகீரை பேஸ்ட்டைப் போட்டு கலந்துவிடுங்கள். அதில், முன்னதாகவே ஊறவைத்து வேக வைத்த பச்சைப்பயறு போட்டு நன்றாகக் கலந்துவிடுங்கள். அதே போல, வேகவைத்த சர்க்கரை வல்லிக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி போடுங்கள். இப்பொது இதை எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். அப்போது, ஒரு கரண்டியை வைத்து உள்ளே இருக்கும் பொருட்களை அழுத்தி விடுங்கள். பிறகு, கொதிக்கும்போது 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுங்கள். கொதித்த பிறகு, ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுக்கள். வல்லாரைக்கீரை சூப் தயார்.
இந்த வல்லாரைக்கீரை லேசாக கசப்புத் தன்மையுடன் இருந்தாலும் சாப்பிடுங்கள். இப்போது செய்துள்ள வல்லாரைக்கீரை சூப்பை 8 பேர் சாப்பிடலாம். உங்கள் வீட்டில் இந்த வல்லாரைக்கீரை சூப் செய்து சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.