/indian-express-tamil/media/media_files/2025/03/15/BRgazJuz3ZZpPHiDpBUQ.jpg)
வல்லாரை சூப்
மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும் வல்லாரைக் கீரையை வைத்து சூப் செய்வது பற்றி செஃப் வெங்கடேஷ் பட் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வல்லாரைக் கீரை, சக்கரை வள்ளி கிழங்கு, பச்சை பயிறு மூன்றையும் வைத்து சூப் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
பட்டை
அன்னாசிப்பூ
சோம்பு
சீரகம்
மிளகு
பூண்டு
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
கல்பாசி
வல்லாரை கீரை
உப்பு
மஞ்சள் தூள்
பச்சை பயிறு
சக்கரை வள்ளி கிழங்கு
சர்க்கரை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பட்டை, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும். பின்னர் இதில் பத்து பல் பூண்டை தோலுடன் இடித்து சேர்க்கவும். கருவேப்பிலை, பச்சை மிளகாய், கல்பாசி சேர்த்து வதக்கவும்.
பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரை கீரையையும் அதில் சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும். அந்த வாட்டிய வல்லாரைக் கீரையில் சிறிது எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்க வேண்டும்.
Vallarai Soup | Unave marunthu | good food | healthy soup for energy | Chef Venkatesh Bhat
பின்னர் கடாயில் உள்ள மீதி வல்லாரை கீரையில் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் அந்த வல்லாரை கீரை சூப்பை எடுத்து வடிகட்டி தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அந்த தண்ணீரில் அரைத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை சாறை சேர்க்கவும்.
பச்சை பயிரை குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த பச்சை பயிரையும் வல்லாரைக் கீரை சூப்பில் சேர்க்கவும். பின்னர் சக்கரை வள்ளி கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சூப்பில் சேர்க்கவும்.
அடுத்ததாக மீண்டும் இந்த சூப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அப்போது அதனை நன்கு மசித்து விடவும். கசப்பு தன்மை தெரியாமல் இருக்க சூப்பில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து விடவும்.
அடுத்ததாக கொதி வந்ததும் இறக்கி குடிக்கலாம் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.