விதைப்பை வீக்கம் குறைய… தினமும் காலையில் இந்த சாறு குடிங்க; டாக்டர் நித்யா
ஆண்களுக்கு ஏற்படும் விதைப்பை வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் என்றும் இதற்காக தினமும் காலையில் குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.
ஆண்களுக்கு ஏற்படும் விதைப்பை வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் என்றும் இதற்காக தினமும் காலையில் குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஒன்றான விதைப்பை வீக்கம் எப்படி சரி செய்வது என்று டாக்டர் வித்யா தனது யூடியூப் பக்கமான நித்யாஸ் வரம் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். விதைப்பையில் அடிபட்டு பிற்காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதில் பொதுவான ஒன்று என்றால் குழந்தையின்மை ஆகும்.
Advertisment
விதைப்பையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிக்களில் நிற்கும் தண்ணீரால் கூற வீக்கம் ஏற்படலாம். இதனால் அதிகப்படியான வலி ஏற்படுத்தும். விதைப்பையை சுற்றி வெரிகோஸ் பிரச்சனையும் ஏற்படும் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த மாதிரியான பிரச்சினைகள் தான் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைய காரணமும் கூட. இந்த மாதிரி பிரச்சனைகளிலிருந்து விடுபட முதலில் நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கு எடுத்து கொள்ள வேண்டிய ஜூஸ் பற்றி டாக்டர் நித்யா கூறுகிறார்.
காலையில் விதைப்பை வீக்கம் இருக்கு என்பவர்கள் வாழைத்தண்டு எடுத்து நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் புதினா சேர்த்து மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் இரவு ஊறவைத்த சப்ஜா விதைகளையும் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடிக்கலாம். இதனால் உடலில் இருக்கும் வீக்கம் குறைந்து விதைப்பை வீக்கம் குறையும். காலையில் இதை குடிப்பதால் உடல் உஷ்ணமும் குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.