நரம்பு சுருண்டு இருக்கா? வெறும் வயிற்றில் நெல்லி சாறு; வெந்நீருடன் 2 வேளை இந்தப் பொடி: டாக்டர் நித்யா டிப்ஸ்
இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். ஆனால், இதனை அலட்சியமாக கருதி சிகிச்சை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். ஆனால், இதனை அலட்சியமாக கருதி சிகிச்சை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இன்றைய சூழலில் நிறைய பேர் நரம்பு சுருட்டு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து பணியாற்றுபவர்கள் பலருக்கு இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது என்று Ask Information யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். தொடைப்பகுதிகளுக்கு கீழ் கருமை சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தால் நரம்பு சுருட்டு பாதிப்பின் அறிகுறியாக இருக்கக் கூடும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை அலட்சியமாக கருதி சிகிச்சை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனை தடுப்பதற்கு சில வழிமுறைகள் இருப்பதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
அதன்படி, உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். இதற்காக தோப்புக் கரணம், சைக்கிளிங் போன்றவற்றை செய்யலாம். மேலும், சில யோகாசனங்களையும் செய்யலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். சித்த மருத்துவத்தில் மசாஜ் செய்வதன் மூலம் இதன் பாதிப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
Advertisment
Advertisements
இதேபோல், இரத்த சுத்தி சூரணம் என்ற மருந்தையும் எடுத்துக் கொள்ளலாம். காலை மற்றும் இரவு என இருவேளையும் இந்த பொடியை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். மேலும், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு, அருகம்புல் சாறு போன்றவற்றை 200 மிலி அளவிற்கு குடிக்கலாம்.
இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் நரம்பு சுருட்டு பிரச்சனையை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.