எப்போதுமே காலை உணவுக்கு இட்லி, தோசை செய்து ரொம்ப போரடிக்குதா, அப்போ ரொம்பவே வித்தியாசம எல்லாரும் விரும்பி சாப்பிடுற மாதிரியான சுவைல எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
உப்பு
தக்காளி
வெங்காயம்
பச்சை மிளகாய்
உருளைக்கிழங்கு
இஞ்சி
கேரட்
குடை மிளகாய்
தயிர் அல்லது எலுமிச்சை பழம்
பச்சரிசியை நன்கு கழுவி ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசியில் இருக்கக்கூடிய தண்ணியை நன்கு வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் தோல் நீக்கிய பெரிய துண்டு இஞ்சி நறுக்கி சேர்க்க வேண்டும்.
அதில் நறுக்கிய மூன்று பச்சை மிளகாய், பெரிய அளவிலான ஒரு உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி துருவி சேர்க்க வேண்டும். அதே போல துருவிய ஒரு கேரட், நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நறுக்கிய பாதி குடமிளகாய், 2 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள மாவுடன் மேல் சொன்ன அனைத்து காய்கறிகளையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும் . இதில் குடமிளகாயும் தக்காளியும் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை. அதேபோல காரம் அதிகமாக இருக்கும் என நினைப்பவர்கள் மிளகாய் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
பின்னர் தேவையான அளவு மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு இதில் ஒரு கால் கப் அளவிற்கு தயிர் சேர்க்க வேண்டும். தயிர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் எலுமிச்சை பழச்சாறையும் பிழிந்து விடலாம்.
இதில் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறை சேர்ப்பதன் மூலம் நல்ல மெது மெதுவாக சாஃப்டா ஆன பதத்திற்கு மாவு ரெடி ஆகும். அடுத்ததாக சிறிதளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளலாம். இதை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை. மாவை நன்றாக கலந்து விட வேண்டும்.
ஒருவேளை அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு மாவு தண்ணீர் போல இருந்தால் அந்த மாவில் சிறிது பச்சை அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு இரண்டு டீஸ்பூன் பச்சை அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம் அதிகமாக சேர்த்துவிட்டால் கல்லு மாதிரி ஆகிவிடும்.
ஒரு அடிப்பக்கம் சமமாக உள்ள கடாயில் தோசை மாதிரி இந்த மாவை ஊற்றி அனைத்து பக்கமும் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். மாவு ஊற்றுவதற்கு முன் ஒவ்வொரு முறையும் சிறிதளவு எண்ணெயை வைத்து கடாயின் அடிப்பக்கத்தில் தேய்த்து விட வேண்டும். தோசை மாத்திரம் சுட்டு எடுத்து இதனுடன் தக்காளி சட்னி, பூண்டு சட்னி, ஊறுகாய் வைத்தோ அல்லது இட்லி பொடி வைத்தோ சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.