அதிகம் மசாலா பொருட்களை சேர்க்காமல் சட்டென்று ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி சிம்பிளாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
உளுத்தம்பருப்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
சாதம்
மஞ்சள் தூள்
உப்ப
தக்காளி
பெரிய வெங்காயம்
குடை மிளகாய்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை சிறிதி தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் சிறிது கருவேப்பிலை சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய குடைமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்கு ச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து அதில் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளற சாதம் ரெடியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“