கிட்னியை க்ளீன் பண்ணும் இந்தப் பழம்... இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க: சொல்லும் சுக்கு காபி தாத்தா
சிறுநீரகத்தை சுத்தப்படுத்த வாழைப்பழம் பெரிதும் பயன்படுகிறது என்று சுக்கு காபி தாத்தா தெரிவித்துள்ளார். இத்துடன் சேர்த்து வாழைப்பழத்தின் பல்வேறு நன்மைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்த வாழைப்பழம் பெரிதும் பயன்படுகிறது என்று சுக்கு காபி தாத்தா தெரிவித்துள்ளார். இத்துடன் சேர்த்து வாழைப்பழத்தின் பல்வேறு நன்மைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறுநீரகத்தை நாம் எல்லோரும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்காக வாழைப்பழம் பெரிதும் உதவுவதாக சுக்கு காபி தாத்தா தெரிவித்துள்ளார். அந்த வகையில், வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகம் சுத்தமாகும் என்று அவர் கூறுகிறார்.
Advertisment
குறிப்பாக, சுமார் 5 வாழைப்பழங்களை சாதத்துடன் பிசைந்து தாம் சாப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியும் என்று அவர் எடுத்துரைக்கிறார்.
இது தவிர இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கும் வாழைப்பழம் உதவுகிறது. இது செரிமான மண்டலத்தை சரியான முறையில் இயங்க வைத்து, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வாழைப்பழம் பயன்படுகிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இது பெரிதும் உதவுகிறது. எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை இது ஊக்குவிக்கிறது.
Advertisment
Advertisements
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது.
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் செரோடோனினாக மாறுகிறது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து அல்சர் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பழம், நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
நன்றி - Behindwoods Hits Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.