2025 ஆம் ஆண்டில் பலரும் ஆரோக்கியமான உணவு பயணத்தைத் தொடங்க முடிவு செய்து இருப்பீர்கள். மேலும் நம்மைப் பற்றிய சிறந்த பதிப்பை வெளிக்கொணர உதவும் பழக்கவழக்கங்களுடன் - உணவு, உடற்பயிற்சி அல்லது அழகு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கலாம். அழகுக்கலை எழுத்தாளர் வசுதா ராய் இந்த முயற்சியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழபழப்பான சறுமத்திற்கு குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
2-3 பீட்ரூட்
6-8 கேரட்
5 நெல்லிக்காய்
மஞ்சள்
இஞ்சி
"அனைவரும் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் மிக்ஸியில் கலந்து வடிகட்டவும். மீதமுள்ள சக்கையை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தலாம்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கேரட், பீட்ரூட், நெல்லி, மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த ஜூஸ், சரும ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று பிராக்மாடிக் நியூட்ரிஷனின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் மீனு பாலாஜி பகிர்ந்து கொண்டார்.
அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
- கேரட்: பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. தோல் பளபளப்பு, பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது முக்கியமானது.
- பீட்ரூட்: நைட்ரேட்டுகள் நிறைந்தவை, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
- நெல்லிக்காய்: கொலாஜன் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி நிரம்பியுள்ளது.
- மஞ்சள்: குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது.
- இஞ்சி: செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
பொருட்களின் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிட்ட பின்னர், இந்த சாறு மனதில் கொள்ள வேண்டிய இரண்டு நன்மைகளை தரக்கூடியது என்று பஜாஜி பகிர்ந்து கொண்டார். "அதிக நார்ச்சத்து கொண்ட மூல உணவுகள் நல்ல பலனை கொடுக்கும். நெல்லிக்காய் போன்ற உணவுகள், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளப்படும் போது, வயிற்றுப் புறணியில் எரிச்சலை ஏற்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்தும். பீட்ரூட், மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றில் ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளன, அவை கல் அபாயத்தை அதிகரிக்கும். உங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு இருந்தால், இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது" என்று அவர் எச்சரித்தார்.
பஜாஜி காலையில் முதலில் இந்த ஜூஸை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும், வயிற்று எரிச்சலைக் குறைப்பதற்கும், காலை அதை குடிக்க சிறந்த நேரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.