வயல் நத்தைகள் குளிர்ச்சித் தன்மை உடையவை என்பதோடு, தனித்துவமான சுவையையும் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வயல் நத்தை சுவையாகவும் காரசாரமாகவும் எப்படி செய்வது என்று பாலாஜி கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
வயல் நத்தைகள் எண்ணெய் சோம்பு பூண்டு கறிவேப்பிலை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் வறுத்த சோம்பு தூள்
செய்முறை
Advertisment
Advertisements
வயல் நத்தைகள் சேற்றில் புதைந்திருப்பதால், அவற்றை முதலில் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் எஞ்சியிருக்கும் அழுக்குகளையும் அகற்றலாம். ஊறிய நத்தைகளை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
அடுத்து, நத்தைகளை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சுமார் அரை மணி நேரம் வேகவைக்க வேண்டும். நத்தைகள் வெந்ததும், ஒரு குச்சி அல்லது கம்பி உதவியுடன் நத்தை இறைச்சி கவனமாக எடுக்க வேண்டும். எடுக்கும்போது, கசப்பான கருப்பு குடல் பகுதியை நீக்கிவிட வேண்டும்.
எடுத்து சுத்தம் செய்த நத்தை இறைச்சியை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பலமுறை கழுவுவது முக்கியம். இதன் மூலம் அந்த இறைச்சியில் உள்ள வழவழப்புத் தன்மை முற்றிலும் நீங்கிவிடும். இப்போது மிளகு வறுவலுக்கான தயாரிப்பு ஆரம்பமாகிறது.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோம்பு சேர்க்கவும். சோம்பு பொரிந்ததும், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, சுத்தம் செய்து வைத்த நத்தை இறைச்சியைச் சேர்க்கவும்.
இறுதியாக, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் வறுத்த சோம்பு தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றும் வரை மிதமான தீயில் சமைத்தால், சுவையான வயல் நத்தை மிளகு வறுவல் தயார்.
இந்த உணவு புரதச்சத்து நிறைந்தது மட்டுமல்லாமல், உடல் சூடு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.