Advertisment

குளிர்ச்சி, நச்சுகளை வெளியேற்றும்: சத்து நிறைந்த வாழைத் தண்டு சூப்

சத்து நிறைந்த வாழைத் தண்டு சூப் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Veg Soup recipe

Veg Soup recipe

வாழைத் தண்டு உடலுக்கு குளிர்ச்சி தரும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படும் குணம் கொண்டது. இப்படி சத்து நிறைந்த வாழைத் தண்டு சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வாழைத் தண்டு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில் வாழைத் தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய வாழைத் தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.

வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்போது அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். மற்றொரு அடுப்பில், கடாய் வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, கொத்த மல்லி, கறிவேப்பிலையைத் தூவி சுடச் சுடச் பரிமாறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment