வாழைக்காய் வறுவலை இப்படி ஒரு முறை செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்
சீரகப் பொடி
செய்முறை : வழக்கம்போல் வாழைக்காய்யை வெட்டாமல் தோலை நீக்கி, சதுரமாக வெட்ட வேண்டும். நீளமாக இருக்க வேண்டும். இந்த வாழைக்காய்களில் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து பிரட்ட வேண்டும். 15 நிமிடங்கள் இது ஊற வேண்டும். தொடர்ந்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, அதில் வாழைக்காய்யை வைக்க வேண்டும். ஒரு பக்கம் வறுபட்டதும், மறுபக்கத்தையும் வறுக்க வேண்டும்.