வாழை மரத்தின் அத்தனை பாகங்களும் பயன்படுத்தலாம். வாழைப் பழம், வாழை இலை, வாழைத் தண்டு, வாழைப் பூ என எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். வாழையில் அத்தனை சத்துகள் நிறைந்துள்ளன. வாழைப்பூ பொரியலாக செய்தால் சிலர் சாப்பிடாமல் இருப்பர். ஆனால் அதில் தோசை அதாவது அடை தோசை செய்து பாருங்க. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வாழைப்பூ - 3 கப்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தோசை அரிசி முதல் பாசிப்பருப்பு வரை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசி மற்றும் பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
இப்போது சிறிய கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த வாழைப்பூவை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இது ஆறியபின் மாவில் கலந்து கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அதே கடாய்யில் கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து இதையும் அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். அவ்வளவு தான் மாவு தயார். அடுத்ததாக தோசைக் கல் வைத்து அடை தோசை போல் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“