நான்வெஜ் ஸ்டைலில் வெஜ் பொறியல்... ஒரு வாழைக்காய் போதும்!

ஒரு வாழைக்காய் போதும் விருந்துக்கு இலையில் வைக்கக்கூடிய சுவையில் வாழைக்காய் வறுவல் தயார் செய்து விடலாம். நான்வெஜ் சுவையில் வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஒரு வாழைக்காய் போதும் விருந்துக்கு இலையில் வைக்கக்கூடிய சுவையில் வாழைக்காய் வறுவல் தயார் செய்து விடலாம். நான்வெஜ் சுவையில் வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vaazhaikkai varuval

ஈஸியாக 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு பொறியல் வகை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு வாழைக்காய் இருந்தால் போதும் சுவையான வாழைக்காய் வறுவல் மொறுமொறுன்னு எப்படி செய்யலாம் என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள் 

வாழைக்காய் - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி   
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி  
மிளகு தூள் - 1 தேக்கரண்டி 
சீரக தூள் - 2 தேக்கரண்டி  
தனியா தூள் - 2 தேக்கரண்டி  
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி  
உப்பு - 1 தேக்கரண்டி  
பெருங்காய தூள்  
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி  
கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி  
ரவை - 2 தேக்கரண்டி 
எண்ணெய்  

செய்முறை

Advertisment
Advertisements

வாழைக்காயை துண்டுகளாக வெட்டி உப்பு நீரில் வைக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவா சேர்த்து மீண்டும் கலக்கவும். வாழைக்காய் வறுவல் மசாலா கலவை தயார். கலவையை ஒரு தட்டில் சமமாக பரப்பவும். வாழைக்காய் துண்டுகளை மசாலா கலவையில் வைத்து இருபுறமும் நன்றாக தடவவும். இப்படி அனைத்து துண்டுகளையும் தயார் செய்து தனியாக வைக்கவும்.

ஒரு தவாவை எடுத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தவா முழுவதும் பரப்பவும்.  வாழைக்காய் துண்டுகளை தவாவில் வைக்கவும், தீயை மிதமாக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.

துண்டுகள் ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். முடிந்ததும், அதை தவாவில் இருந்து அகற்றி ஒரு தட்டில் வைக்கவும். சிறிது வறுத்த கறிவேப்பிலையை மேலே தூவி விட்டால் போதும் சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: