செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விருப்பமாக உண்ணும் வாழைக் காய் வைத்து சிம்பிள் ரோஸ்ட் ரெசிபி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விருப்பமாக உண்ணும் வாழைக் காய் வைத்து சிம்பிள் ரோஸ்ட் ரெசிபி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வாழைக் காய் ரோஸ்ட் ரெசிபியை நம்முடைய வீடுகளில் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
நம்முடைய வீடுகளில் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் தயார் செய்ய நினைப்பது உண்டு. ஆனால், அவர்களுக்கு என்ன வகையான ஸ்நாக்ஸ் செய்யலாம் என்பதில் குழப்பம் நிலவும். இதற்காக சிம்பிள் டிப்ஸ் கொடுத்துள்ளார் பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் வெங்கடேஷ் பட்.
Advertisment
அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விருப்பமாக உண்ணும் வாழைக் காய் வைத்து சிம்பிள் ரோஸ்ட் ரெசிபி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வாழைக் காய் ரோஸ்ட் ரெசிபியை நம்முடைய வீடுகளில் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
முதலில் ஒரு வாழைக் காய் எடுத்து அதன் தோலை சீவிக் கொள்ளவும். பிறகு, அவற்றை அரை இஞ்ச் அளவுக்கு சாய்வாக வைத்து நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து, அதில் வெட்டிய வாழைக் காயை சேர்க்கவும். அதனுடன் ஒரு எலுமிச்சையை பாதி அளவு நறுக்கி அதனை வாழைக் காய் மீது பிழிந்து விடவும். பிறகு, மஞ்சள் தூள், இஞ்சிம் பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு சேர்த்து, அந்த மசாலா வாழைக் காயுடன் சேரும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும். இவற்றை அப்படியே 15 நிமிடங்கள் தனியாக வைத்து விடவும்.
இதனிடையே, தயிர் டிப் தயார் செய்ய, ஒரு கப்பில் தயிர் எடுத்து, அதில் எலுமிச்சை ஊறுகாய் சேர்த்து, ஒரு ஸ்பூன் மூலம் நன்றாக கலந்து கொள்ளவும். அதன் மேல் சீரகத் தூள் தூவி விட்டால், தயிர் டிப் ரெடி.
வாழைக்காய் பொறிக்க தேவையான மசாலா தயார் செய்ய, ஒரு தட்டு எடுத்து அதில் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், சீராக தூள், கரம் மாசாலா தூள், மல்லி தூள், பெருங்காய தூள், இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு, ஏற்கனவே தனியாக வைத்துள்ள வாழைக் காயை எடுத்து அந்த மசாலாவுடன் போட்டு பிரட்டி எடுக்கவும்.
இதன்பின்னர், ஒரு தோசைக் கல் எடுத்து அதில் கடலை விட்டு சூடேற்றவும். பிறகு மசாலாவில் பிரட்டி எடுத்த வாழைக் காயை போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த வாழைக் காய் ரோஸ்ட் ரெசிபி ரெடி.
இந்த வாழைக் காய் ரோஸ்ட் ரெசிபியை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தயிர் டிப்புடன் சேர்த்து ருசிக்கலாம்