லெமன் சோறு, தக்காளி சோறு, தயிர் சோறு, புதினா சோறு இப்படி எல்லா வெரைட்டி சோறுக்கும் பெஸ்ட் சைட் டிஷ் என்றால் அது வாழைக்காய் வறுவல் என்று கூறலாம். அதிலும் வாழைக்காய் வறுவல் இப்படி செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும்.
வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், உங்களுக்கு போதுமான அளவு காரம் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
தாளிப்பதற்கு கொஞ்சம் கடுகு உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
மிளகு
வாழைக்காய் வறுவல் செய்முறை:
முதலில் வாழைக்காயை தோள் சீவிக்கொள்ளுங்கள். மெல்லிசாக இல்லாமல் ரொம்பவும் தடிமனாக இல்லாமல் அளவாக கட் பண்ணிக்கொள்ளுங்கள். கட் பண்ண வாழைக்காயை சூடான தண்ணீரில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி வேகவைத்த பிறகு வறுத்தால் சாஃப்ட்டாக இருக்கும்.
வேக வைத்து எடுத்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் கரம் மசாலா,
1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். லேசாக மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள்.நன்றாகப் புரட்டி கலந்துவிடுங்கள்.
வாழைக்காயை வறுப்பதறு ஒரு பான் எடுத்துக்கொள்ளூங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணுங்கள். எண்ணெய் சூடானதும் சிறிது அளவு கடுகு உளுத்தம் பருப்பு போடுங்கள். கடுகு பொறிந்ததும், நாம் தயார் செய்து வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு வேக வையுங்கள். ஒரு பக்கம் வெந்த உடன் இன்னொரு பக்கம் திருப்பி போடுங்கள். நன்றாக வெந்த பிறகு கறிவேப்பிலையைத் தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் வறுவல் தயார். எல்லா வெரைட்டி சோறுக்கும் பெஸ்ட் சைட் டிஷ்ஷா இருக்கும் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“