Advertisment

வெஜிடேரியன்களுக்கு 'பெர்னீஷியஸ் அனிமியா' வர காரணமே இதுதான்... அப்போ என்ன சாப்பிடுவது?

நரம்பு பாதிப்பு உள்ள நபர்கள் உணவு முறைகள் கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெஜிடேரியன்களுக்கு 'பெர்னீஷியஸ் அனிமியா' வர காரணமே இதுதான்... அப்போ என்ன சாப்பிடுவது?

நரம்பு பாதிப்பு  உள்ள நபர்கள்  உணவு முறைகள் கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை.

Advertisment

இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

 பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும். தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும். நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்.

செய்தி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர்

மற்றும்ஆராய்ச்சியாளர்: 9344186480

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment