வீட்டிலேயே சுவையான வெஜ் சாண்ட்விச் ரெசிபி இப்படி செய்யுங்க
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
பாவ் பாஜ் மசாலா – ½ டீஸ்பூன்
சீரகப் பொடி – ½ டீஸ்பூன்
கேரட், குடைமிளகாய்- தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
உருளைக் கிழங்கு – 2
சாட் மசாலா – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
ப்ரெட் – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும். அடுத்து மிளகாய் தூள், சீரக தூள், பாவ் பாஜ் மசாலா, நறுக்கிய கேரட், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது மசித்த உருளைக்கிழங்கு, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 அல்லது 3 நிமிடம் அப்படியே வதக்கவும். வேக விட்டு அடுப்பை நிறுத்தி சாட் மசாலா சேர்த்து கலந்து விடவும்.
அடுத்தாக பிரெட்டில் இரு பக்கமும் வெண்ணெய் தடவி மசாலாவை ஸ்டப் செய்து அடுப்பில் தோசைக் கல் வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரெட்டை இரு பக்கமும் திருப்பிப் போட்டு வேக விடவும். அவ்வளவு தான் சுவையான வெஜ் சாண்ட்விச் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”