பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுக்கு இருக்கும் சின்ன பசியை போக்க சுவையான கட்லெட் எப்படி செய்வது என்று பார்ப்போம். கொஞ்சம் ஸ்பைசியாகவும் டேஸ்டியாகவும் ஒரு கட்லெட் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5 வேகவைத்தது பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது கேரட் - 1 துருவியது பச்சை குடைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது காலிஃபிளவர் - 1 கப் வேகவைத்தது பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது கொத்தமல்லி இலை நறுக்கியது எலுமிச்சை பழச்சாறு - 1 பழம் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி முந்திரி பருப்பு நறுக்கியது பிரட் தூள் சோள மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
அகல பாத்திரத்தில், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், குடைமிளகாய், காலிஃபிளவர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு போடவும்.
இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசையவும். அடுத்து இதில் முந்திரி பருப்பு, பிரட் தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு கட்லெட் கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.
சிறிய கிண்ணத்தில், சோள மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைக்கவும். செய்த கட்லெட்'டை சோள மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டவும். இதை 10 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த கட்லெட்'டை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். சுவையான வெஜிடபுள் கட்லெட் தயார்.