இந்த பொங்கலை சத்தான உணவு முறையுடன் தொடங்க அற்புதமான நாட்டு காய்கறிகளை வைத்து குழம்பு அதுவும் செஃப் தாமு ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொங்கல் நாட்களில் கிராமப்பகுதிகளில் நாட்டு காய்கறிகளை வைத்து குழம்பு செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் நகரத்தில் இருப்பவர்களுக்கு காய்கறிகள் கிடைக்கவில்லை அதுமாதிரி சுவையில் குழம்பு வைக்க முடியவில்லை என்று புலம்புபவர்கள் இந்த முறையில் குழம்பு ட்ரை பண்ணுங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் 200 கிராம்
பச்சை வாழைப்பழம் 1/2 கிராம்
கருணை கிழங்கு 100 கிராம்
அவரைக்காய் 100 கிராம்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சக்கர வள்ளி கிழங்கு) 100 கிராம்
நெல்லிக்காய் 2 கிராம்
பச்சைப் பட்டாணி 100 கிராம்
மொச்சை 100 கிராம்
முருங்கைக்காய் 1 கிராம்
வெங்காயம் 150 கிராம்
தக்காளி 150 கிராம்
பச்சை மிளகாய் 2
புளி 50 கிராம்
எண்ணெய்
கடுகு
தேக்கரண்டி
வெந்தயம்
சிவப்பு மிளகாய் 2
கறிவேப்பிலை
உப்பு
பச்சை மாங்காய்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதில் மேற்குறிப்பிட்ட காய்கறிகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து கலந்து விடவும்.
Pongal Special( Kaikari Kuzhambu) Iniya Pongal Thirunal Nal Vazthukal
இதில் சிறிது தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் போட்டு கலந்து விட்டு மூடி வைத்து வேகவிடவும். பின்னர் அதில் புளி கரைசலை சேர்த்து கொதி விட்டு இறக்கவும். நன்கு கொதிவந்து பச்சை வாசம் நீங்கியதும் மேலே சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை தூவி மிதமான சூட்டில் கொதிவிட்டு இறக்கவும்.