சப்பாத்தி பலருக்கும் பிடிக்கும். காலை, இரவு உணவாக சப்பாத்தி எடுத்துக் கொள்வோம். பன்னீர், உருளைக்கிழங்கு சைடு டிஷ்யாக வைத்து சாப்பிடுவோம். ஆனால் சப்பாத்தியை இப்படி செய்யும் போது சைடு டிஷ்யே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம். வெஜிடபிள் சப்பாத்தி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காய்கறிகள் (பட்டாணி, பீன்ஸ், கேரட்) - எல்லாம் சேர்த்து 1கப்
உருளைக்கிழங்கு - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் காய்கறி போட்டு அடுப்பில் வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது. உப்பு, மிளகாய் சேர்த்த வதக்கவும். அடுத்து உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலக்கவும். இதுதான் ஸ்டஃப்பிங் பொருட்கள்.
அடுத்து எப்போதும் போல் கோதுமை மாவு வைத்து சப்பாத்தியிற்கு மாவு பிசையவும். இப்போது சப்பாத்திக்கு நடுவே இந்த காய்கறி கலவையை வைத்து மடித்து வைக்கவும். அடுப்பில் சப்பாத்தி கல் வைத்து இந்த ஸ்டஃப்பிங் சப்பாத்தியை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நன்கு வேக வைக்கப்பட்டதும், எடுத்து சூடாக பரிமாறலாம். அவ்வளவு தான் சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“