காய்கறிகள் சேர்த்த ஹெல்தி சப்பாத்தி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
கோதுமை மாவு – 200 கிராம்
கேரட் துருவல், கோஸ் துருவல்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய்
வெங்காயம் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம்
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாகத் திரட்டவும்.
எப்போதும் போல் சப்பாத்தி சுட்டு எடுக்கவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு இதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“