ஆரோக்கிய உணவுகள் உடல் நலத்திற்கு நல்லது. தினமும் உணவில் காய்கறிகள் சேர்த்துக் கொள்வது ஆரேக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் காய்கறிகள் சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு கண்டிப்பாக இந்த ரெசிபி பிடிக்கும். தோசையில் காய்கறிகளை வைத்து கொடுப்பது சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
கேரட் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். வரமிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஸ்வீட் கார்னை வேக வைத்து எடுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு மாவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து மிளகுத்தூள், அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் காய்கறி கலந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்கவும். அவ்வளவு தான் சத்து நிறைந்த சுவையான காய்கறி தோசை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/