நாம் சாப்பிடும் உணவில் வெவ்வேறு வகைகள் இருப்பதால் சாப்பிடுவதுற்கு முன்பு நமது குளுக்கோஸ் அளவை வைத்துகொண்டு எந்த முடிவுக்கு வர இயலாது. இதனால் சாப்பிட்ட பின்பு நமது ரத்த குளுகோஸ் அளவு, மற்றும் உடல் பருமனானவர்களிடத்தில் இன்சுலின் அளவு ஆகியவை முக்கியமாக இருக்கிறது.
இந்நிலையில் நடைபெற்ற ஆய்வில், கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக காய்கறிகள் மற்றும் புரோட்டீன் எடுத்துக்கொண்டால், 29 % குளுகோஸ் குறைகிறது. சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து எடுத்த பரிசோதனையில் இது வெளியாகி உள்ளது.
மேலும் இன்சுலினும் குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு வேளை உணவில் இருக்கும் புரோட்டின் அல்லது கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு முன்பு சாப்பிட்டால், பெப்டைட் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது, இது இன்சுலின் உற்பத்தியை குறைக்கிறது.
இந்நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் நார்சத்து, கொழுப்பு சத்து, புரோட்டீன் ஆகியவை உணவில் இருக்கும் குளுக்கோஸை குறைவாக உடல் எடுத்துக்கொள்ள உதவுகிறது.
இதனால் நாம் கார்போஹைட்ரேட் சாப்பிடுவதற்கு முன்பாக அதிக புரோட்டின், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், குறைவான குளுக்கோஸை உணவிலிருந்து உடல் எடுத்துக்கொள்ளும்.
இதனால் நமது ஹார்மோன்கள் சீராக இருக்கும். குழந்தை பிறக்க உதவும், குறைவாக பசி எடுக்கும். சருமம் பொலிவாக இருக்கும். வீக்கம் குறையும், வயதாவதை தடுக்கும்.
காய்கறிகளை அதிகம் எடுத்துகொண்டால் அதில் இருக்கும் நார்சத்து அதிகமாக உணவை சாப்பிடும் எண்ணத்தை குறைக்கும். உங்களுக்கு சூப் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை குடித்த பின்பு சாப்பிடுங்கள். இதுபோல முதலில் காய்கறி சாலட் மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொளுங்கள்.
தினமும் டீ, காப்பியுடன் காலையை தொடங்குவதை தவிர்த்து, ஸ்மூத்தியோடு தொடங்குங்கள். காலை உணவை ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். மேலும் நீங்கள் நூடுல்ஸ், பாஸ்தா சாப்பிடும்போது, அதிக காய்கறிகளை அதில் சேர்த்து சாப்பிடுங்கள்.