/indian-express-tamil/media/media_files/2025/07/17/chef-venkatesh-bhat-2025-07-17-15-20-32.jpg)
மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான ஒரு ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் எப்படி செய்வது என்று தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருக்கிறார். உளுந்து, பச்சரிசி மற்றும் காய்கறிகளை வைத்து மொறுமொறுப்பான வெஜிடபிள் வடை செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு இது சுவையான ஒரு ரெசிபி ஆகும். டீ நேரங்களில் கூட இதை சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
பச்சரிசி - 75 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள்
பச்சை மிளகாய் - 2 முதல் 3
இஞ்சி - 25 முதல் 30 கிராம்
கறிவேப்பிலை
நறுக்கிய காலிஃப்ளவர் - 50 கிராம்
நறுக்கிய முட்டைக்கோஸ் - 50 கிராம்
பச்சை பட்டாணி - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
நறுக்கிய கேரட் - 50 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசியை தனித்தனியே 4 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக, ஆனால் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இது மெதுவடை மாவு போல இல்லாமல், மசால் வடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அரைத்த மாவுடன் அனைத்து நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட்), கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை 5-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு சிறிய கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, இந்த தாளிப்பை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக, எண்ணெயை சூடாக்கி, வாழை இலையில் சிறிது தண்ணீர் தெளித்து, மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து, வடை வடிவில் தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இந்த சுவையான வெஜிடபிள் வடைக்கு தனியாக சட்னி தேவையில்லை, ஏனெனில் மாவில் அனைத்து மசாலாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான இந்த வடை, மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. டீயோடு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.