ஆயுத பூஜை ஸ்பெஷல்: மசாலா கலந்த வெள்ளை சுண்டல்; இத விட ஈஸி டிப்ஸ் இல்ல!

நவராத்திரிக்கு பிரசாதம் தருவதற்காக மெனக்கெட்டு சில பாரம்பரிய சமையல் வகைகளை செய்வது வழக்கம். சத்து நிறைந்த இந்த பிரசாதத்தை செய்து பாருங்கள். செய்வதும் மிகவும் சுலபம், சுவையும் அருமையாக இருக்கும்.

நவராத்திரிக்கு பிரசாதம் தருவதற்காக மெனக்கெட்டு சில பாரம்பரிய சமையல் வகைகளை செய்வது வழக்கம். சத்து நிறைந்த இந்த பிரசாதத்தை செய்து பாருங்கள். செய்வதும் மிகவும் சுலபம், சுவையும் அருமையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-30 155838

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்காதேவியின் (சக்தியின்) ஒவ்வொரு அவதாரங்களிலும் அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள். அதற்கு ஏற்றபடி பூக்களும் பூஜைகளும் இருக்கும். அதேபோல ஒன்பது நாளும் வெவ்வேறு வகையான பிரசாதங்கள் செய்வார்கள். அதில் ஒரு சுண்டல் வகை, ஒரு சாத வகை, பிறகு வேறு ஏதேனும் உணவுகளும் வைத்து நைவேத்தியம் செய்வார்கள்.

Advertisment

அந்த வகையில் பொதுவாக செய்யப்படும் ஒரு உணவு என்னவென்றால் அது சுண்டல் தான். அதை எப்படி சிம்பிளாக, சுவையாக செய்வது, அதில் உள்ள சத்துக்கள், ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

சுண்டல் பருப்பு வகைகள் எனப்படும் உணவு வகைகளின் ஒரு பகுதியாகும். பருப்பு வகைகள் புரதத்தின் சில மற்றும் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாகும். சுண்டல் புரதத்தின் முக்கிய மூலமாகும். நார்ச்சத்து, கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கல் இதில் காணப்படுகின்றன. சுண்டல் பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இதை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் சுண்டலில் காணப்படுகின்றன, இது உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஊறவைத்த சுண்டலை அப்படியே சாப்பிடலாம். இந்த ஊறவைத்த சுண்டலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. சுண்டல் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது.

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்

வெள்ளை சுண்டல் - 1/4 கிலோ ( பெரியது)
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- சிறு துண்டு
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ,கடலைப்பருப்பு,  சோம்பு-  தலா ஒரு டீஸ்பூன்
மல்லி- 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வேர்க்கடலை- 1டீஸ்பூன்
பெருங்காயம்- சிட்டிகை
கருவேப்பிலை கொத்தமல்லி அலங்கரிக்க

செய்முறை

வெள்ளை சுண்டலை முந்தைய இரவில் நீரில் ஊறவைக்கலாம். காலையில் உடனடியாக தயாரிக்க வேண்டுமென்றால், சூடான நீரில் வைத்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறிய சுண்டல், வேகும் போது மென்மையாகவும், பூப்போல மெதுவாக மலரும். பின்னர் குக்கரில் 5 அல்லது 6 விசில்கள் வரும் வரை சுண்டலை வேக வைத்து விடவும்.

இப்போது ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுந்து, வத்தல மிளகாய், தனியா மற்றும் சோம்பு ஆகியவற்றை வெந்து வரும் வரை வறுத்து, பின்னர் சற்று ஆறியதும் பொடியாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல் வேர்கடலியையும் நன்கு வறுத்து தோலை நீக்கி, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம்.

மீண்டும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கரிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். இதில் முந்தையபடி வேக வைத்த வெள்ளை சுண்டலை சேர்த்து, தயாரித்த மசாலா பொடி, சற்று பெருங்காயம் மற்றும் தேவையான உப்பையும் சேர்த்துக் கிளறவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்தால் சுண்டல் தயார்!

இந்த சுண்டல் மிக அதிகமாக நேரம் வதக்க வேண்டியதில்லை; சில நிமிடங்கள் போதுமானது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: