சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை கட்டுப்படுத்த இந்த ஒரு குழம்பு போதும்

ரொம்ப ஈசியா செய்யக்கூடிய வெந்தயக் குழம்பு ரெசிபி இது. மறக்காம நீங்களும் சமைத்து பாருங்க.

ரொம்ப ஈசியா செய்யக்கூடிய வெந்தயக் குழம்பு ரெசிபி இது. மறக்காம நீங்களும் சமைத்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
food

food

ரொம்ப ஈசியா செய்யக்கூடிய வெந்தயக் குழம்பு ரெசிபி இது. மறக்காம நீங்களும் சமைத்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 1,1/2 டீஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்

Advertisment
Advertisements

கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

பூண்டு – 10 பற்கள்

தக்காளி (சின்னது) – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

வத்தல் பொடி – 1 டீஸ்பூன்

மல்லிப்பொடி – 1டீஸ்பூன்

குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்

சீரக பொடி – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – 1 எலுமிச்சை அளவு

செய்முறை:

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.பின்னர் பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

அதனுடன் வத்தல் பொடி, குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள், 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். வெந்தய குழம்பு ரெடி

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: