'உணவே மருந்து' என்று கூறக் காரணம், நாம் அன்றாட தாயார் செய்யும் உணவுகளில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகின்றன. அதனால்தான், நம்முடைய முன்னோர்கள் அவ்வாறு குறிப்பிட்டனர். அதிலும் குறிப்பாக, கிராம புறங்களில் தாயார் செய்யப்படும் உணவுகளில் ஊட்டச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில், நம்முடைய ஊர்களில் தயார் செய்யப்படும் சுடு கஞ்சியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
நம்முடைய ஊர்களில் பல வகையான கஞ்சிகளை ருசித்துருப்போம். ஆனால் குருணை அரிசியில் செய்யப்படும் கஞ்சியை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம். குருணை அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து சமைத்த சுவையான மற்றும் சத்தான கஞ்சி எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
குருணை அரிசி - 250 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
தேங்காய் பால் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் குருணை அரிசி நன்றாக அலசி கழுவி வைக்கவும். பின்னர் குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் 750 மில்லி தண்ணீரை சேர்க்கவும். பிறகு அதில் குருணை அரிசி, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போட்டு அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
ஒரு வேளை குக்கரில் நீங்கள் சமைத்தால் முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 - 8 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கலாம். வெறும் பாத்திரத்தில் வைக்கும்போது கொதி வந்தவுடன் தீயை குறைக்கலாம். அதன் பிறகு, அதில் தேங்காய் பாலை விட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
இவற்றுக்கு சைடிஷ்சாக புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை கஞ்சிக்கு மேலும் சுவையை கூட்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“