ஒரு முறை செப் பட் சொன்ன மாதிரி, ஆலு கோபி புலாவ் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – ¾ கப்
காலிஃ பிளவர் – 1 கப்
பாசுமதி அரிசி – 3 கப்
நெய் – 2 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 5
பிரியாணி இலை- 2
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு தேவையான பொருட்கள்
செய்முறை: முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, கழுவிக்கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து, தாளிக்க வேண்டும். பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு 1 முதல் 3 நிமிடம் வரை வதக்க வேண்டும். அடுத்து, அதில் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளரவும். பின்பு 3 ½ கப் தண்ணீரை விட்டு, நன்கு கலந்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான ஆலு கோபி புலாவ் ரெடி.