ஒரு முறை வீட்டில் , இப்படி வாழைக்காய் மப்பாஸ் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
10 பூண்டு
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சோம்பு
4 லவங்கம்
3 துண்டு பட்டை
3 ஸூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
3 பச்சை மிளகாய்
20 கிராம் இஞ்சி நீளமாக வெட்டியது
1 கொத்து கருவேப்பிலை
100 கிராம் சின்ன வெங்காயம்
வாழைக்காய் 3 நறுக்கியது
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
முக்கால் டீஸ்பூன் தனியாத்தூள்
முக்கால் டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டம்ளர் தண்ணீர்
உப்பு
தேங்காய் பால்
கால் ஸ்பூன் கான்பிளவர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பூண்டு, மிளகு, சோம்பு, லவங்கம், பட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கிளரவும். கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். தேங்காய் பாலில் கான்பிளவர் சேர்த்து கரைத்து சேர்க்கவும். தொடர்ந்து இதை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த பொடியை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“