ஒரு முறை வீட்டில் இந்த செட்டிநாடு சேனை வறுவலை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு – அரை கிலோ
கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள்
6 காஷ்மீரி மிளகாய்
1 மூடி துவிய தேங்காய்
1 ஸ்பூன் கடுகு
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
4 வத்தல்
அரை ஸ்பூன் பெருங்காயத்தூள்
3 ஸ்பூன் புளி தண்ணீர்
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் வெல்லம்
செய்முறை: சேனைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதை சதுரமாக நறுக்க வேண்டும். இதை மஞ்சள் பொடி,கொஞ்சம் புளி சேர்த்த தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பாதி வெந்ததும் . அதை கொதிக்கும் நீரில் சேர்த்து 7 நிமிடங்கள் வேகவிட வேண்டும். தொடர்ந்து மிக்ஸ் காஷ்மீரி மிளகாய், கடுகு, துருவிய தேங்காய் துருவல் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, வத்தல், சேர்த்து கிளரவும். ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் புளி தண்ணீர் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கிளரவும். தொடர்ந்து வெல்லம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மொறு மொறுப்பாக வத்தக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“