பலாப்பழ சீசன் வந்தாச்சு; வெங்கடேஷ் பட் ஸ்டைலில் ஜாக்ஃப்ரூட் 65 செய்து பாருங்க!
அசைவ உணவிற்கு இணையான சுவையில் திகழக் கூடியது தான் பலா காயை வைத்து செய்யக்கூடிய பலாக் காய்-65. பலாப்பழ சீசன் முடிவதற்குள் ஒருமுறை பலா காயை வைத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு ஒருமுறை செய்து கொடுத்தால் அதன் சுவைக்காக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்..
அசைவ உணவிற்கு இணையான சுவையில் திகழக் கூடியது தான் பலா காயை வைத்து செய்யக்கூடிய பலாக் காய்-65. பலாப்பழ சீசன் முடிவதற்குள் ஒருமுறை பலா காயை வைத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு ஒருமுறை செய்து கொடுத்தால் அதன் சுவைக்காக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்..
முக்கனிகளில் ஒன்றாக உள்ள பலாப்பழத்தை வைத்து பல வகைகளில் உணவுப் பொருட்களை நாம் தயார் செய்தாலும் அசைவ உணவிற்கு இணையான சுவையில் திகழக் கூடியது தான் பலா காயை வைத்து செய்யக்கூடிய 65. இது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழும். எவ்வளவோ பொருட்களை வைத்து 65 செய்திருந்தாலும் இந்த பலாக்காய் 65 என்பது சுவையில் மிகவும் அபாரமாக இருக்கும்.
Advertisment
பலாப்பழ சீசன் முடிவதற்குள் ஒருமுறை பலா காயை வைத்து இந்த முறையில் 65 செய்து வீட்டில் கொடுத்தால் யாருமே இது ஒரு சைவ 65 என்று நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அசைவ சுவை மிகுந்து இருக்கும். இந்த சமையல் குறிப்பு பிரபல் செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் ஜாக்ரூட் 65 எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளார். அதன் செய்முறை குறித்து பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
பலாக்காய் 1 நறுக்கி அவித்தது(200கிராம்)
Advertisment
Advertisements
காஷ்மீரி மிளகாய் 15
வினிகர் 3 ஸ்பூன்
எலுமிச்சை 1
உப்பு
2 ஸ்புன் கான்பிளவர்
2 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் மைதா மாவு
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
அரை ஸ்பூன் கரம் மசாலா
1 கொத்து கருவேப்பிலை
சமையல் எண்ணெய்
செய்முறை: பலாக்காய்யை நன்றாக கழுவி நறுக்க வேண்டும். இதை குக்கரில் உப்பு சேர்த்து சேர்த்து பாதி வரை வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் காஷ்மீரி மிளகாய்யை சேர்த்து 7 நிமிடங்கள் வரை கிளரவும். தண்ணீர் வற்றியதும், இதில், குக்கிங் 3 டேபிள்ஸ்பூன் வினிகர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் மாதிரி எடுத்துக் கொள்ளவும்.
தற்போது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பலாக்காய்யை சேர்த்து அதில், எலுமிச்சை சாறு, கான்பிளவர் மாவு, அரிசி மாவு, மைதா மாவு, அரைத்த மிளகாய் பேஸ்ட், உப்பு, கருவேப்பிலை, கரம் மசாலா, மிளகாய் பொடி, கருவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை வைத்துவிட்டு நாம் கலந்து வைத்திருக்கும் பலாக்காயை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மற்றொரு புறம் இதை திருப்பி போட்டு நன்றாக சிவக்கும் வரை வேக விட வேண்டும்.
இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு எண்ணெயிலிருந்து இந்த பலாக்காயை எடுத்து எண்ணெய் வடிந்த பிறகு தட்டில் எடுத்து வைத்து விடலாம். கடைசியாக சிறிது கருவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து மேலே அலங்காரத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சிக்கன் 65 விட சுவை மிகவும் அதிகமாக இருக்கக்கூடிய ஜாக்ரூட் 65 தயாராகிவிட்டது.