இரு முறை வீட்டில் பலாக்காய் வைத்து இந்த வெஜ் 65 செய்து பாருங்க . செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் 1 நறுக்கி அவித்தது
200 எம். எல்
காஷ்மீரி மிளகாய் 15
வினிகர் 3 ஸ்பூன்
எலுமிச்சை 1
உப்பு
2 ஸ்புன் கான்பிளவர்
2 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் மைதா மாவு
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
அரை ஸ்பூன் கரம் மசாலா
கால் பூன் மிளகாய் தூள்
1 கொத்து கருவேப்பிலை
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : பலாக்காய்யை நன்றாக கழுவி நறுக்க வேண்டும். இதை குக்கரில் சேர்த்து பாதி வரை வேகவைக்கவும். உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் காஷ்மீரி மிளகாய்யை சேர்த்து கிளரவும். தண்ணீர் வற்றியதும், இதை வினிகர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பலாக்காய்யை சேர்த்து அதில், எலுமிச்சை சாறு, கான்பிளவர் மாவு, அரிசி மாவு, மைதா மாவு, அரைத்த மிளகாய் பேஸ்ட், உப்பு, கருவேப்பிலை, கரம் மசாலா, மிளகாய் பொடி, கருவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதை சூடான எண்ணெய்யில் போட்டு வறுத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“