மணத்தக்காளி என்றாலே மருத்துவ பயன்களுக்கு பஞ்சாமிருகாது. இதன் இலைகள் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணையும் குணமாக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகின்றன. இப்படிப்பட்ட மணத்தக்காளியில் எப்படி குழம்பு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் தன்யா, சீரகம், மிளகு, உளுந்து சேர்த்து நன்கு வாசனை வரும் வரை 4 நிமிடங்கள் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் நீட் வசமாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தொடர்ந்து, அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்போது சுத்தமான நீரில் 2 முறை அலசி வைத்துள்ள மணத்தக்காளி கீரையை எடுத்து அவற்றோடு சேர்த்து ஒன்றரை டீஸ்பூன் பாரீஸ் ஜாக்ரி சேர்த்து நன்றாக பிறட்டி எடுக்க வேண்டும். இதனுடன், அரைத்து வைக்கப்பட்டுள்ள பொடியில் ஒரு டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி..!
மணத்தக்காளி கீரை சாப்பிடுவதன் நன்மைகள்
மணத்தக்காளி கீரையில் வைட்டமின் டி, வைட்டமின் ஈ & சி, ரிபோபிளவின், கரோட்டின், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அல்சரை குணப்படுத்தும். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை முதலில் சரிசெய்யும். உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக்கும். இதயத்தைப் பலப்படுத்தும், பசியைத் தூண்டும், ஜீரணத்தை எளிதாக்கும். உடல் கழிவுகள் (சிறுநீர் பிரிதல்) முறையாக நடக்கும். சளித் தொல்லை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.