செஃப் வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் மசால் தோசை ரெசிபி எப்படி செய்வது என்பது இங்கே
Advertisment
மசாலாவுக்கு
தோல் நீக்கிய உருளைக் கிழங்கை குக்கரில் சேர்த்து 4 விசிலுக்கு நன்கு மேஷ் ஆகும் வரை சமைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் 1 டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். அது பொறிந்ததும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 2 டீஸ்பூன் முந்திரி பருப்பு, இடித்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்க்கவும்.
நீளவாக்கில்நறுக்கிய2 வெங்காயத்தை இத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். வெங்காயம் நிறம் மாறும் முன்னரே ஒரு லிட்டர் தண்ணீரை இதில் ஊற்றவும். வெங்காயம் மேஷ் ஆகும் அளவுக்கு சமைக்க வேண்டும். வெங்காயம் நன்கு குக் ஆனதும், இதில் சமைத்த உருளைக் கிழங்கை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறவும். கொத்தமல்லி தழை சேர்த்து, மசாலா நன்கு குக் ஆகும் வரை சமைக்கவும்.
குறிப்பு: தோசை மசாலாவுக்குஎவ்வளவு உருளைக் கிழங்கு சேர்க்கிறோமோ அதே அளவுக்கு வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் அளவு குறைந்தால் மசாலா நன்றாக இருக்காது.
தோசை மாவுக்கு
ஒரு பாத்திரத்தில் பாதி கப் உளுந்துக்கு (150 கிராம்), இரண்டு கப் புழுங்கல் அரிசி (600 கிராம்) ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து மூன்று முறை நன்கு கழுவவும். இதை அறை வெப்ப நிலையில் 2 மணி நேரம் ஊற வைத்த பிறகு, கிரைண்டரில் நன்கு மைய அரைக்கவும். இந்த மாவில் உப்பு கலந்து நன்கு கிளறி 4 மணி நேரம் வெளியே வைக்கவும். இதில் ஒரு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
(இந்த மாவை ஃபிரிட்ஜில் வைத்து 4 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.)
ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், ஆறு டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.
இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் முக்கால் கரண்டி மாவு ஊற்றவும். தோசை நன்கு வெந்ததும், அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மசாலாவை வைக்கவும்.
அருமையான மசால் தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“