தமிழர்களையும், மெது வடையும் பிரிக்க முடியாது. தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்கு ஒரு வரம், என்கிறது ஆயுர்வேதம்.
Advertisment
செஃப்வெங்கடேஷ் பட் மெதுவடை ரெசிபியை ஒருமுறை தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
செய்முறை
ஒரு வட்ட பாத்திரத்தில் அரைத்த உளுந்து மாவை எடுத்து, அதில் பெருங்காயம், உப்பு, பொடிதாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து, மாவை வீடியோவில் காட்டியபடி கையால் நன்கு அடித்து பிசையவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கையில் எடுத்துதட்டி போடவும். அதிக தீயில் வைத்து, வடை நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.
வெங்கடேஷ் பட் டிப்ஸ்
மெதுவடையில் எப்போதும் பெருங்காயம், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் இந்த 4 தான் சேர்க்க வேண்டும். இதுதவிர நீங்கள் சேர்க்கும் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாமே மைசூர் போண்டாவில் சேர்ப்பது. மைசூர் போண்டாவுக்கும், மெதுவடைக்கும் இதுதான் வித்தியாசம் என்றார் பட்.
எப்போதுமே மெதுவடை சமைக்கும்போது மாவு அரைத்த உடனே வடை போட்டு எடுக்கவும். அப்போதுதான் வடை நல்ல முறுகலாக வரும். மாவை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதேபோல மாவை அரை மணி நேரம் வெளியே வைத்து போட்டாலும் கூட, எண்ணெய் நிறைய பிடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“