ஆனியன் பக்கோடா, காரம் மணம் ரகசியம் இந்த 4 பொருட்கள்தான்: வெங்கடேஷ் பட் ஸ்டைலில் நீங்க ட்ரை பண்ணுங்க!
குழந்தைகள், பெரியோர்களுக்கு மாலையில் என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என நினைப்போம். இதுபற்றி கூகுளில் தேடி கலைத்தும் போவதுண்டு. ஆனால், நம்முடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
காரமாகவும் மணமாகவும் உள்ள ஆனியன் பக்கோடா எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
நம்முடைய வீடுகளில் உள்ள குழந்தைகள், பெரியோர்களுக்கு மாலையில் என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என நினைப்போம். இதுபற்றி கூகுளில் தேடி கலைத்தும் போவதுண்டு. ஆனால், நம்முடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
Advertisment
அந்த வகையில், காரமாகவும் மணமாகவும் உள்ள ஆனியன் பக்கோடா எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அவரது ஸ்டைலில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு பிடித்த டேஸ்டியான ஆனியன் பக்கோடா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 250 கிராம் இடித்த பூண்டு - 50 கிராம் இடித்த பச்சை மிளகாய் - 4 சோம்பு - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன் வனஸ்பதி (டால்டா) - 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு - 150 கிராம் அரிசி மாவு - 50 கிராம் கருவேப்பிலை - ஒரு கை அளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
Advertisment
Advertisement
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். கடலை மாவு சேர்க்கும் முன் பாத்திரத்தில் சேர்த்த பொருட்களை கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதன்பின்னர், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும். கடைசியாக கருவேப்பிலை சேர்த்து நன்றாக கையால் கலந்து விடவும். பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கடலை எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூடான ஆனியன் பக்கோடா ரெடி.