செஃப் வெங்கடேஷ் பட் சின்ன வயசுல சாப்பிட்டு குஷியான டிஷ்: கேரளா ஸ்டைல் பழம் பொரி: இப்படி செய்யுங்க!
கேரளா ஸ்டைல் பழம் பொரி எப்படி உங்களது வீட்டில் தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். தற்போது அந்த ரெசிபியை எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
கேரளா ஸ்டைல் பழம் பொரி எப்படி உங்களது வீட்டில் தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். தற்போது அந்த ரெசிபியை எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
சமையல் துறையில் வல்லுநராக வலம் வருபவர் வெங்கடேஷ் பட். இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
Advertisment
ஒரு ரெசிபியை எப்படி எளிதில் செய்து அசத்தலாம் என்பதை மிக நிதனாமாகவும், தெளிவாகவும் சொல்லி விளங்க வைக்கக் கூடியவராகவும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் கற்ற சமையல் கலையை உலகறிச் செய்து வருகிறார். இவரது ரெசிபிகள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் தனக்கு 10 வயது இருக்கும் போது சாப்பிட்டு மிகவும் சந்தோசப்பட்ட டிஷ் குறித்து பகிர்ந்துள்ளார். கேரளாவில் அவரது தந்தை வழி அத்தை - மாமா திருவனந்தபுரத்தில் உள்ள காலே மார்க்கெட்டில் காந்தி என்கிற ஓட்டலை நடத்தி வந்துள்ளார். அங்கு பழம் பொரி மிகவும் பேமஸ் என்கிறார். அதே ஸ்டைலில் எப்படி உங்களது வீட்டில் தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த ரெசிபியை எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
மைதா மாவு - 200 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உப்பு - சிறிதளவு குக்கிங் சோடா - சிறிதளவு சர்க்கரை - 50 கிராம்
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் மைதா மாவு சேர்க்கவும். பிறகு அதனுடன் அரிசி மாவு, உப்பு, குக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். இதனை சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும்.
இதன்பின்னர், நன்கு பழுத்த நேந்திரம் வாழைப்பழம் எடுத்து, அதாவது அதன் தோல் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அத்தகைய நேந்திரம் வாழைப்பழம் எடுத்து அதனை இரண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டில் இரண்டு பகுதியாக வெட்டவும்.
மாவு புளித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் கொதித்து வந்தவுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மாவில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
எண்ணெய் கொதித்து வந்தவுடன், வாழைப்பழத்தை மாவில் மூழ்கடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பழம் பொரி ரெடி. நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க மக்களே!!!