ஒரு கப் ரவை; முக்கால் கப் அரிசி மாவு... ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசைக்கு வெங்கடேஷ் பட் ரெசிபி!

ரவா தோசை உடன் கார புதினா சட்னி வைத்து சாப்பிடுவது சூப்பர் காம்ஃபோ ட்ரை பண்ணி பாருங்க.

ரவா தோசை உடன் கார புதினா சட்னி வைத்து சாப்பிடுவது சூப்பர் காம்ஃபோ ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
rava do

ஹோட்டல் ஸ்டைலில்  மிருதுவான ஆனியன் ரவா தோசை செய்வது குறித்து  வெங்கடேஷ் பட்  கூறியுள்ளார் . அதுபற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையானவை 

வெங்காயம்-1
ரவை -1 கப்
அரிசி மாவு
மைதா மாவு
முந்திரி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
சீரகம், மிளகு
பெருங்காயத் தூள்
எண்ணெய்


செய்முறை

Advertisment
Advertisements

வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். ரவா தோசை செய்ய 1 கப் ரவைக்கு 4 டம்ளர் தண்ணீர், முக்கால் கப் அரிசிமாவு, முக்கால் கப் மைதா மாவு சேர்க்கவும். இதை சேர்த்து இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்தாக அதில் முந்திரியும் சேர்த்து கலக்கவும்.

இதை தயார் செய்து வைத்த பின் 10 நிமிடம் கழித்து 1 கைப்பிடி ரவை, அரை ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கவும். மாவு கெட்டியாக இருககும் அதனால் இபபோது 1 கப் தண்ணீர் சேர்க்கவும். மொத்தமாக 5 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். 

இப்போது அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பரப்பி விடவும். வெங்காயம் வெந்ததும் மாவை வெளிப்புறத்தில் இருந்து ஊற்றி வேக விடவும். அடுப்பை மெதுவாக வைத்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து வேக வைத்து ஒரு புறம் வெந்து எடுத்தால் சுவையான மிருதுவான  ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: